400 உணவகங்கள் மூலம் வாரத்திற்கு இரண்டு நாட்கள் ரூ.5-க்கு மீன்சாதம்: முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் பாஜக 208 இடங்களில் அபார வெற்றி பெற்றது. அதனபடி, 15 ஆண்டுகளாக அங்கு ஆட்சி செய்த மம்தா பானர்ஜி தலைமையிலான திரிமூனால் காங்கிரஸ் ஆட்சியை படு தோல்வியடைய செய்து, அறுதிப் பெரும்பான்மையுடன் முதன்முறையாக பாஜக ஆட்சி பிடித்துள்ளது.

அம்மாநிலத்தின் முதல்வராக கடந்த 09-ஆம் தேதி சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றார். இதையடுத்து அவர் பல்வேறு அதிரடி  அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; ''மேற்கு வங்கத்தில் சுமார் 400 பிரத்யேக உணவகங்களில் வாரத்துக்கு இரண்டு நாட்களுக்கு ரூ.5 விலையில் மீன்சாத உணவு வழங்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.

முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது, பாஜக ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்க மக்களின் பிரத்யேக உணவான மீன் உணவுக்கு சிக்கல் ஏற்படும் என மம்தா பானர்ஜி கூறி இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் இந்த அறிவிப்பை சுவேந்து அதிகாரி வெளியிட்டுள்ளார்.

அதாவது, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மதுக்கடைகள் செயல்பட அனுமதிக்கப்படாது என்ற அறிவிப்பையும் மேற்கு வங்க முதல்வர் இன்று அறிவித்துள்ளார்.

அத்துடன், இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ரூ.3,000 வழங்கும் அன்னபூர்ணா திட்டத்துக்கான விண்ணப்பங்கள் நாளை (மே 27) முதல் விநியோகிக்கப்படும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளைப் பெற அனைத்து இந்தியக் குடிமக்களும் தகுதியானவர்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், மேற்கு வங்க சுகாதாரத்துறையில் இருந்து பிரித்து, தனியாக 'ஆயுஷ்' (AYUSH) துறை உருவாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். கடந்த வாரம் சட்டவிரோத குடியேறிகளை கண்டறிந்து அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது மற்றும் அவர்களை நாடு கடத்துவது என்ற தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தும் நோக்கில், நாடு கடத்துவதற்கு முன்னதாக அவர்களை தங்க வைக்க தடுப்பு மையங்களை அமைக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அம்மாநில சுவேந்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

அதேப்போன்று, மாநில அரசுப் பணிகளுக்கு பணியாளர்களை வெளிப்படையான முறையில் நியமிக்கும் நோக்கில், அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநில அரசு ஒரு புதிய ஆள் சேர்ப்பு கொள்கையை அறிமுகப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த, 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் மேற்கு வங்க முதல்வர் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister Suvendu Adhikari orders the provision of fish meals for Rs 5 two days a week through 400 restaurant


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->