கோடையின் தாக்கம்; தமிழகத்தில் பள்ளிகள் தள்ளிவைப்பு; அனைத்து பள்ளிகளும் ஜுன் 04-ஆம் தேதி திறப்பு..! - Seithipunal
Seithipunal


கோடை விடுமுறைக்காக பள்ளிகள் மூட்டப்பட்ட நிலையில் வரும் ஜூன் 1-ந் தேதி அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் காரணமாக ஜூன் 04-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

2026–2027-ஆம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,04-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 01-ஆம் தேதியும், 01-ஆம் வகுப்பு முதல் 03-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 04-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகளையும், தற்போதைய வானிலை முன்னறிவிப்புகளையும் கருத்தில் கொண்டு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தலின்படி, தற்போது புதிய முடி எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும், 01-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வருகின்ற ஜூன் 04 அன்று ஒரே நாளில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக, கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிகளில் சுகாதார வசதிகள், குடிநீர் வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

All Schools in Tamil Nadu to Reopen on June 4th


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->