AI மீது கீர்த்தியின் கண்டனம்...! ஆனால் இது அப்படி இல்லை...! - விஜய் ஆண்டனி
Keerthi condemnation AI But this not case Vijay Antony
நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குனர் சந்திரு இயக்கத்தில் உருவான ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் இந்த மாதம் 28-ஆம் தேதி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் அதிகம் பேசப்படும் ஏஐ (AI) தொழில்நுட்பம் குறித்த தனது கவலைகளையும் பகிர்ந்தார்.“இப்பொழுது மனிதர்களுக்கு பெரிய சவாலாக மாறி இருப்பது ஏஐ. மனிதர்கள் உருவாக்கிய தொழில்நுட்பமே நம்மை தாண்டி வேகமாக சென்று கொண்டிருப்பது போல் உணரப்படுகிறது.
என்னுடைய புகைப்படங்களை எடுத்து ஏஐ-யில் மாற்றி சமூக வலைத்தளங்களில் போடப்பட்டதை பார்த்தபோது நான் அதிர்ச்சி அடைந்தேன். சில நேரங்களில் ஏஐ மிகவும் எரிச்சலூட்டும் நிலைக்கு போய்விடுகிறது. இதன் பயணம் எங்கு முடியும் என்பது தெரியவில்லை. தொழில்நுட்பம் வளர்வதோடு பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இது உண்மையிலேயே பயமளிக்கிறது” என அவர் தெரிவித்தார்.மேலும், கீர்த்தி சுரேஷின் இந்த கருத்துகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, நடிகர் விஜய் ஆண்டனி தனது பார்வையை வெளிப்படுத்தினார்.“வருங்காலத்தில் ஏஐ விவசாயத்திற்கே மிகப்பெரிய வரப்பிரசாதமாக மாறும்.
மனிதர்களின் உழைப்பை குறைத்து, பயன்களை அதிகரிக்கும் கருவியாக ஏஐ தற்போது முன்னேறும் பாதையில் உள்ளது. பயம் கொள்ள வேண்டியது அல்ல, சரியான பயன் பெறக்கூடிய தளமாக இதைப் பார்க்க வேண்டும்” என்று அவர் பதிலளித்தார்.
English Summary
Keerthi condemnation AI But this not case Vijay Antony