"என் புருஷன் மாதம்பட்டி ரங்கராஜை பார்த்தீங்கனா..டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வரச்சொல்லுங்க!" ஜாய் கிரிசில்டா ! - Seithipunal
Seithipunal



ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, தனது கணவர் மற்றும் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து வெளியிட்ட சமீபத்திய பதிவால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டிஎன்ஏ டெஸ்ட் செய்யத் தயாராக இருப்பதாக முன்பே அறிவிப்பு வெளியிட்ட ரங்கராஜ், தற்போது தலைமறைவாக உள்ளதாக ஜாய் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜாய் கிரிசில்டா – ரங்கராஜ் திருமணம் கடந்த ஆண்டு திருவான்மியூரில் ரகசியமாக நடைபெற்றது. ரங்கராஜுக்கு முதல் திருமணத்தில் இரண்டு குழந்தைகள் இருப்பது பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த இரகசிய திருமணம், ஜூலை மாதத்தில் ஜாய் வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் தான் பொது மக்களுக்கு தெரியவந்தது. அதே வேளையில் தாம் ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாக அவர் கூறி இருந்தார்.

ஆனால் அதன் பின்னர், இருவருக்கும் இடையே கடும் பிரச்சினைகள் வெடித்தன. ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாகவும், அடித்துத் துன்புறுத்தியதாகவும், பலமுறை கர்ப்பமாகி மூன்று முறையும் கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் ஜாய் அதிர்ச்சி தகவல்கள் வெளியிட்டார். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ரங்கராஜ் மகளிர் ஆணையத்தில் விசாரணைக்கும் ஆஜராகி இருந்தார்.

இந்நிலையில், ஜாய் சமீபத்தில் இட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு மீண்டும் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. அந்த பதிவில் இவர்,

“என் புருஷன் மாதம்பட்டி ரங்கராஜை பார்த்தீங்கனா அவரை டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வரச்சொல்லுங்க. 15 நாளாச்சு ஸ்டேட்மெண்ட் விட்டுட்டு. இப்போ எங்க தலைமறைவா இருக்காரு? நேர்மையும், துணிவும் இருந்தா டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வாங்க ஹஸ்பண்ட் மாதம்பட்டி ரங்கராஜ்,”

என்று எழுதியுள்ளார். இதனுடன் இருவரும் சேர்ந்து எடுத்துள்ள நெருக்கமான புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

ஜாயின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பி வருகிறது. தற்போது ரங்கராஜ் எங்கு உள்ளார்? அவர் டிஎன்ஏ டெஸ்டுக்கு வருவாரா? என்ற கேள்விகள் சூடுபிடித்துள்ளன.

இந்த விவகாரம் மேலும் எந்த திசைக்கு செல்கிறது என்பதை காத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Have you seen my husband Madhampatti Rangaraj Ask him to come and take a DNA test Joy Crisilda


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->