விஜயகாந்தின் இறப்புக்கு ஏன் செல்லவில்லை? சொர்க்கத்தில் கேப்டன்! வடிவேலு சொன்ன காரணத்தை போட்டுடைத்த குரு லக்ஷ்மன்!
Why didnot you go to Vijayakanth death Captain in heaven Guru Lakshman refutes Vadivelu reason
மாரீசன் படத்தில் வடிவேலுவுடன் நடித்த நடிகர் குரு லக்ஷ்மன், தன்னிடம் வைகை புயல் வடிவேலு தனியாக பகிர்ந்து கொண்ட ஒரு முக்கிய உரையாடலை வெளிப்படுத்தியுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு இணைய சேனலுக்கான பேட்டியில் பேசும்போது குரு லக்ஷ்மன், மாரீசன் படத்தின் படப்பிடிப்பின்போது வடிவேலுவுடன் ஏற்பட்ட உரையாடலை நினைவுகூர்ந்தார். “நானும் மதுரைக்காரன் என்று தெரிந்தவுடன் வடிவேலு சார் என்கிட்ட ரொம்ப பேசுவார். ஒருநாள் விஜயகாந்த் சார் பற்றி பேச தொடங்கினேன். அப்போது உடனே அமைதியாகிவிட்டார்,” என்று அவர் கூறினார்.
பின்னர் வடிவேலு தன் மனநிலையை வெளிப்படுத்திய விதத்தையும் குரு தெரிவித்தார்:“மனுஷன் இறந்ததுக்கு கூட போக முடியலே. போயிருப்பேன்… ஆனா நான் அவ்வளவு திட்டிட்டதுக்குப் பிறகு ‘இவன் எதுக்குவந்தான்’னு பேசுவாங்க. அதுக்குத்தான் போகல. ஆனா ஒன்று மனசார சொல்றேன்… விஜயகாந்த் இப்ப சுவர்க்கத்துலதான் இருப்பார்.”என்று வடிவேலு கலங்கியபடி கூறியதாக குரு லக்ஷ்மன் பகிர்ந்துள்ளார்.
வடிவேலு–விஜயகாந்த் உறவு ஒரு காலத்தில் நெருக்கமானது. 'தவசி' உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். திரை உலகில் வளர்ந்த பின்னர் ஏற்பட்ட சில மனக்கசப்புகளும், 2006-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் வடிவேலு விஜயகாந்தை விமர்சித்ததுமே இவர்களது உறவில் பிளவை ஏற்படுத்தியது.
அதன் பிறகும் விஜயகாந்த் வீட்டில் வடிவேலு காட்சிகள் பார்க்கப்பட்டதாக, அவரது மகன் சண்முகபாண்டியனே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், விஜயகாந்தின் மறைவுக்கு வடிவேலு செல்லவில்லை என்பதே அப்போது பெரிய சர்ச்சையாகி இருந்தது.
இப்போது, அதற்கான காரணம் தான் கூறிய அந்தச் சொற்களே என்பதை குரு லக்ஷ்மன் வெளிப்படுத்தியுள்ளதால், இந்த விவகாரம் மீண்டும் இணையத்தில் விவாதமாகி வருகிறது.
English Summary
Why didnot you go to Vijayakanth death Captain in heaven Guru Lakshman refutes Vadivelu reason