இதுவே இந்தியாவில் நடந்திருந்தால் என்ன ஆகும்? இந்தியான்னா தகரம்..ஆஸின்னா தங்கமா? – அஸ்வின் விளாசல்! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் 2025–26 ஆஷஸ் தொடர் நவம்பர் 21-ஆம் தேதி பெர்த் மைதானத்தில் துவங்கியது. முதல் நாளிலேயே 19 விக்கெட்டுகள் விழுந்ததால், கடந்த 100 ஆண்டுகளில் ஆஷஸில் முதல் நாளிலேயே அதிக விக்கெட்டுகள் விழுந்த மோசமான சாதனை இந்தப் போட்டியில் உருவானது.

டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் ஆஸ்திரேலிய பவுலர்கள் நெருப்பாக பந்துவீசி இங்கிலாந்தை 172 ரன்களுக்கு சுருட்டினர். ஹாரி ப்ரூக் 56, ஓலி போப் 46, ஜேமி ஸ்மித் 33 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியார்.

பின் ஆஸ்திரேலியா களமிறங்கியபோது, அவர்கள் கூட 123/9 என மோசமாக திணறினர். அலெக்ஸ் கேரி 26, கேமரூன் கிரீன் 24 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இங்கிலாந்து பவுலர்கள் ஆஸ்திரேலியாவை சுருட்டி வைத்தனர்.

இவ்வளவு விக்கெட்டுகள் விழுந்தாலும், பெர்த் பிட்ச் குறித்து வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் யாரும் பெரிதாக விமர்சிக்கவில்லை. ஆனால் சில நாட்களுக்கு முன்பு இந்தியா–தென் ஆப்பிரிக்கா கொல்கத்தா டெஸ்டில் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தது. அதனை முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் உள்ளிட்ட பல வெளிநாட்டு விமர்சகர்கள் கடுமையாக தாக்கினர்.

ஆனால் இப்போது அதே வாகனே பெர்த் பிட்சில் இங்கிலாந்து பவுலிங் “அருமை” என பாராட்டினார். இந்த இரட்டை தரநிலையை கண்டித்து, இந்திய ஸ்பின் லெஜண்ட் ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டரில் கடும் சாடல் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அஸ்வின் பதிவு:
“பெர்த்தில் இன்று 19 விக்கெட்டுகள் விழுந்தது. அது ‘கிரிக்கெட்டின் ஒரு சிறப்பான நாள்’ என சொல்லப்படுகிறது. இதே விஷயம் இந்தியாவில் கௌகாத்தியில் நடந்திருந்தால் என்ன ஆகும்? இது முழுக்க முழுக்க இரட்டை தரநிலை!” என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அஸ்வின் சாடலும், வெளிநாட்டு விமர்சகர்களின் பிட்ஷ் விமர்சனங்களும் தற்போது கிரிக்கெட் உலகில் பெரிய விவாதமாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What if this happened in India Is India tin is Asia gold Ashwin Vlasal


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?


செய்திகள்



Seithipunal
--> -->