'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா: விஜய்யின் கடைசி படத்தின், கடைசி 'குட்டி ஸ்டோரி' மலேசியாவில்..! - Seithipunal
Seithipunal


விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஜனநாயகன்'. விஜயின் அரசியல் வருகையால் இந்த படம் கடைசி படமாக உள்ளது.இதனால் விஜய் ரசிகர்களையும் தாண்டி இப்படத்தின் எதிர்பார்ப்பு பெரியளவில்உள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் மேனன் எனப் பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கல் வெளியீடாக ஜனவரி 09-ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

'ஜனநாயகன்' படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் குடியரசு தினம் அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் 22-ஆம் தேதி படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. அத்துடன் கடந்த நவம்பர் 08-ஆம் தேதி 'தளபதி கச்சேரி' என்ற முதல் சிங்கிள் வெளியானது. இப்பாடலை அனிருத், அறிவு உடன் இணைந்து விஜய் பாடியிருந்தார். இந்தப் பாடல் பரவலான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதாவது, 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 27-ஆம் தேதி, மலேசியா, கோலாலம்பூரில் Bukit Jalil Stadium-இல் நடைபெறவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான KVN வெளியிட்டுள்ளது. இதே அரங்கில் 'லியோ' படத்தின் இசை வெளியீட்டை நிகழ்த்த திட்டமிட்டது படக்குழு. ஆனால், அப்போது இந்த இடத்தில் வேறு ஒரு நிகழ்ச்சி நடந்ததால், நிகழவில்லை. இதற்கு முன்பும் சில தமிழ் படங்களின் நிகழ்வுகள் நெளிநாடுகளில் நடைபெற்றுள்ளன. 

சிம்பு நடித்த 'விண்ணைதாண்டி வருவாயா' இசை அறிமுக விழா 2010-இல் லண்டனில்  BAFTA Hall-இல் நடைபெற்றது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தின் இசையவெளியீட்டு விழா 2017-இல் துபாயில் Burj Park-இல் நடைபெற்றது.தெப்போது  இந்தப் பட்டியலில் விஜயின் 'ஜனநாயகன்' படமும் இடம் பிடித்துள்ளது. 

60 ஆயிரம் இருக்கைகள் கொண்ட, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தான் பிரம்மாண்டமான படங்களின் இசை வெளியீட்டு நிகழ்வுகள் நடைபெறும். இப்போது இந்த Bukit Jalil Stadium கிட்டத்தட்ட 85 ஆயிரம் இருக்கைகள் கொண்ட இடம் என சொல்லப்படுகிறது. விஜயின் இசை வெளியீட்டு விழா என்றாலே விஜயின் பேச்சும் குட்டிக் கதையும் தான் ஸ்பெஷல். இது விஜயின் கடைசி படம் என்பதால் இந்த முறை கடைசியாக ஒரு குட்டிக் கதை மலேசியாவிலிருந்து ஒலிக்கப் போகிறது. இருப்பினும் தமிழகத்தில் நடந்து இருந்தால் விஜய் ரசிகர்குளுக்கு ஆறுதலாக இருந்து இருக்கும் என அவர்கள் கவலை கொண்டுள்ளனர்.

இருப்பினும், கரூர் நெரிசலை தொடர்ந்து, விஜய் இவ்வாறான பிரமாண்ட விழா வெளிநாட்டில் நடப்பதே நன்று என்று ரசிகர்கள் ஒரு சிலர் கூறிவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijays last film Janyayan at the audio launch event in Malaysia


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->