சீதாவைவிட்டு பிரிந்த பிறகு இரண்டாவது திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம்..உண்மையை உடைத்த பார்த்திபன்!
This is the reason why he didnot marry again after separating from Seetha Parthiban reveals the truth
தேசிய விருது பெற்ற புதிய பாதை படத்தின் மூலம் கோலிவுட்டில் வித்தியாசமான இயக்குநராக அறிமுகமான பார்த்திபன், இயக்கத்திலும் நடிப்பிலும் தனித்துவத்தை நிரூபித்தவர். நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து, இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்த இவர்களின் உறவு, சில காரணங்களால் முறிந்து விவாகரத்துக்கு சென்றது. அதன் பிறகு பார்த்திபன் மறுமணம் செய்யாமல் தன்னிச்சையான வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
சமீபத்தில் அளித்த நேர்காணலில், இரண்டாவது திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய அவர்,
“சீதாவுக்கு பிறகு எந்த பெண்ணையும் என் மனைவியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் மறுமணம் செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.
மேலும், தற்போதைய உலகத்தில் உறவுகள் வேகமாக உருவாகி, வேகமாக உடையும் நிலையைக் குறிப்பிட்டு,
“இந்த நிலையற்ற உறவுகளுடன் பயணிப்பதற்குப் பதிலாக நினைவுகளுடன் பயணிப்பதே எனக்கு அமைதியைக் கொடுக்கிறது”என்று தெரிவித்துள்ளார்.
பாக்யராஜ் உதவியாளராக இருந்து இயக்குநராக உயர்ந்த பார்த்திபன், தனது முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றது அவரை தனித்துவமான படைப்பாளியாக உயர்த்தியது. தொடர்ந்து உள்ளே வெளியே, ஹவுஸ்ஃபுல், குடைக்குள் மழை போன்ற வித்தியாசமான முயற்சிகளை கொண்ட படங்களை இயக்கிய அவர், நடிப்பிலும் பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் அன்பைப் பெற்றவர்.
தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை அமைதியாக ஏற்றுக்கொண்டு, குடும்ப பிணைப்புகளையும் நினைவுகளையும் மதித்து வாழ்ந்து வருவதாக இந்த பேட்டி மூலம் பார்க்க முடிகிறது.
English Summary
This is the reason why he didnot marry again after separating from Seetha Parthiban reveals the truth