ஒற்றைத் தலைவலியால் அவதியா? ஒற்றைத் தலைவலி குறைய உடனே சாப்பிட வேண்டிய பழங்கள் – வீட்டிலேயே இயற்கையான நிவாரணம்!
Do you suffer from migraines Fruits to eat immediately to relieve migraines natural relief at home
ஒற்றைத் தலைவலி பலரையும் துன்புறுத்தும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. மனஅழுத்தம், தூக்கமின்மை, வேலைப்பளு, தண்ணீர் குறைவாகக் குடித்தல், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் போன்ற காரணங்களால் இது ஏற்படுகிறது. மருந்துகளை மட்டுமே நம்பாமல், சில இயற்கையான பழங்களை உணவில் சேர்த்தால் இந்தத் தலைவலியை வேகமாக குறைக்க முடியும்.
தர்பூசணி
தர்பூசணி அதிகளவு நீர்ச்சத்து கொண்டது. நீர்ச்சத்து குறைவால் தலைவலி அதிகரிக்கக்கூடும். எனவே தர்பூசணி உடலுக்கு நீர்ப்பூர்த்தி செய்து தசைகளை தளர்த்தி வலியை குறைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் வலியை அடக்க உதவும்.
ஆப்பிள்
ஆப்பிளில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, பெக்டின் ஆகியவை உடலை சுத்தப்படுத்தி, தலைவலி, குமட்டல், வாந்தி போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகின்றன. ஒற்றைத் தலைவலியின்போது ஆப்பிள் மிக நல்ல தேர்வாகும்.
வாழைப்பழம்
வாழைப்பழம் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களால் நிறைந்தது. குறிப்பாக பொட்டாசியம், மெக்னீசியம் அதிகம் உள்ளதால் நரம்புத் தசைகளை நிம்மதிப் படுத்தி, ஒற்றைத் தலைவலியை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
அவகேடோ
அவகேடோவில் உள்ள பொட்டாசியம், லுடீன், பீட்டா கரோட்டின் போன்றவை வலி மற்றும் வலி தூண்டும் நரம்பு அழுத்தங்களை குறைக்க உதவுகின்றன. எனவே ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் அவகேடோவை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இவை தவிர, ஒற்றைத் தலைவலியை கட்டுப்படுத்த சத்தான உணவு, போதுமான தண்ணீர் குடித்தல், யோகா, தியானம், ஒழுங்கான தூக்கம் ஆகியவையும் அவசியமானவை. இயற்கையான முறையில் தலைவலியை கட்டுப்படுத்த விரும்புவோருக்கு இந்தப் பழங்கள் மிகச்சிறந்த நிவாரணம் தரும்.
English Summary
Do you suffer from migraines Fruits to eat immediately to relieve migraines natural relief at home