ஐபிஎல் தொடரின் முதல் 20 போட்டிக்கான அட்டவணை நாளை மறுதினம் வெளியீடு; சேப்பாக்கத்தில் சிஎஸ்கே மோதும் போட்டிகள் தள்ளிப்போகும் வாய்ப்பு..? - Seithipunal
Seithipunal


19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்கி மே 31-ந்தேதி முடிவடையவுள்ளது. இந்த சீசனுக்கான போட்டி அட்டவணை இந்நேரத்தில் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் போட்டிக்கான மொத்த அட்டவணையை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. 

இதனையடுத்து, 2026 சீசனுக்கான முதல் 20 நாட்களுக்கான அட்டவணை வருகிற 12-ந்தேதி (நாளை மறுதினம்) வெளியிடப்படவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், மீதமுள்ள நாட்களுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்படும்  என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

இந்த சீசனின் முதல் போட்டியும், இறுதிப் போட்டியிடம் நடப்பு சாம்பியன் ஆர்.சி.பி. அணிக்கு சொந்தமான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரம் தமிழகத்தில் ஏப்பரல் 03-வது வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் ஏப்ரல் 03-வது வாரத்திற்குப் பிறகு சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே மோதும் போட்டிகள் இருக்கும் வகையில் அட்டவணை தயாராக வாய்ப்புள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The schedule for the first 20 matches of the IPL series will be released the day after tomorrow


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->