நன்னடத்தை விதியை மீறி, டேரில் மிட்செல் மீது பந்தை வீசிய விவகாரம்; அர்ஷ்தீப் சிங்கிற்கு அபராதம் விதித்துள்ள ஐசிசி ! - Seithipunal
Seithipunal


டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்தியா- நியூசிலாந்து இடையிலான இந்த போட்டியில், இந்தியா அணி, 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 03 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 

இந்த போட்டியில் இந்தியா 05 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 159 சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அப்போது டேரில் மிட்செல் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 11-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். 

இந்த ஓவரில்  டேரில் மிட்செல் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் விளாசினார். இதனால் அர்ஷ்தீப் சிங் விரக்தி அடைந்தார். அடுத்த பந்தை மிட்சல் தடுத்தாடினார். அந்த பந்து அர்ஷ்தீப் சிங்கிடம் சென்றது. அப்போது ஸ்டம்பை நோக்கி அர்ஷ்தீப் சிங் பந்த வீச அது டேரில் மிட்செல் தொடைப்பகுதியை தாக்கியது.

இதனால் கோபம் அடைந்த டேரில் மிட்செல் அர்ஷ்தீப் சிங்கை திட்டியவாறு முறைத்துக் கொண்டு வந்தார். அத்துடன் நடுவரிடம் புகார் அளித்தார். அர்ஷ்தீப் சிங்கும் நடுவரிடம் பேசினார். அதன்பின்னர் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டேரில் மிட்செலை சமாதானப் படுத்தினார். பின்னர் அர்ஷ்தீப் சிங்கும் மிட்சலிடம் மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில், ஐ.சி.சி. விதிப்படி, அர்ஷ்தீப் வீரர்களின் நன்னடத்தை விதியை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக, அவருக்கு போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபாரம் விதித்துள்ளது. மேலும், விளையாட்டில்  தடைவிதிப்பதற்கான தகுதி இழப்பு புள்ளி ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மாதங்களுக்குள் அர்ஷ்தீப் சிங் 04 அல்லது அதற்கு மேல் தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றால் போட்டியில் பங்கேற்க தடைவிதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ICC fines Arshdeep Singh for flouting Code of Conduct by throwing ball at Daryl Mitchell


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->