33 மணி 35 நிமிடம் தூங்கி சாதனை! சீனாவில் நடந்த வினோத ‘நீண்ட தூக்கம் போட்டி’ !உலகின் நம்பர் 1 சோம்பேறி மனிதருக்கு பரிசு! - Seithipunal
Seithipunal


சீனாவில் வினோதமான போட்டிகள் நடப்பது புதிதல்ல. அந்த வரிசையில், பாட்டோ நகரிலுள்ள ஒரு வணிக வளாகத்தில் “நீண்ட நேரம் தூங்கும்” போட்டி நடத்தப்பட்டது. விதி மிக எளிமையானது, ஆனால் கடினமானது—படுக்கையை விட்டு எழுந்திருக்கக் கூடாது!

இந்த போட்டியில் படுத்தபடியே செல்போன் பயன்படுத்தலாம், புத்தகம் படிக்கலாம், உணவு ஆர்டர் செய்து சாப்பிடலாம். ஆனால் எழுந்து நிற்கவும், உட்காரவும், கழிவறைக்கு செல்லவும் முழு தடை. யார் இந்த விதியை மீறினாலும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

நவம்பர் 15 அன்று நடந்த இந்தப் போட்டியில் 240 பேர் பங்கேற்றனர். ஆரம்ப 24 மணிநேரத்தில் 186 பேர் வெளியேறினர். 54 பேர் மட்டும் தொடர்ந்து முயற்சி செய்தனர்.

இறுதியில், அனைவரையும் பின்னுக்கு தள்ளி, ஒரு இளைஞர் 33 மணி 35 நிமிடங்கள் படுக்கையிலேயே இருந்து அபாரமாக வெற்றி பெற்றார். அவருக்கு 3000 யுவான் (சுமார் ₹37,000) ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

இந்த வினோத போட்டி சமூக வலைதளங்களில் சென்சேஷனாகி, “தூங்குவதற்கே பரிசா?” என்று நெட்டிசன்கள் கிண்டலாகவும், ஆச்சரியமாகவும் கருத்து பதிவு செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Record breaking 33 hours and 35 minutes of sleep Bizarre longest sleep competition held in China Prize for the world number 1 laziest man


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->