விற்பனையில் அசத்தும் ஜூப்பிட்டர் 110 ஸ்கூட்டரின் விலையை உயர்த்திய டிவிஎஸ் – இப்பொது ஜூப்பிட்டரின் விலை எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஜூப்பிட்டர் 110 ஸ்கூட்டரின் விலையை உயர்த்தியுள்ளது. மற்ற இருசக்கர வாகனங்களின் விலை உயர்வுடன் ஒப்பிடும்போது, ஜூப்பிட்டர் 110 மாடலின் விலை அதிகமாக உயர்த்தப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. வேரியன்ட்களுக்கு ஏற்ப ரூ.2,385 முதல் ரூ.3,250 வரை விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் ஹோண்டா ஆக்டிவாவுக்கு அடுத்தபடியாக அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக டிவிஎஸ் ஜூப்பிட்டர் 110 இருந்து வருகிறது. டிவிஎஸ் நிறுவனம் இந்த ஸ்கூட்டரை டிரம், டிரம் அலாய், டிரம் SXC, டிஸ்க் SXC மற்றும் ஸ்பெஷல் எடிஷன் என ஐந்து வேரியன்ட்களில் விற்பனை செய்து வருகிறது. தற்போது டிரம் வேரியன்டின் விலை ரூ.75,600 ஆகவும், டிரம் அலாய் ரூ.79,835 ஆகவும், டிரம் SXC ரூ.84,000 ஆகவும், டிஸ்க் SXC ரூ.87,750 ஆகவும், ஸ்பெஷல் எடிஷன் ரூ.88,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும்.

மற்ற டிவிஎஸ் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலைகள் நூற்றுக்கணக்கில் மட்டுமே உயர்த்தப்பட்ட நிலையில், ஜூப்பிட்டர் 110 ஸ்கூட்டருக்கு மட்டும் ரூ.3,250 வரை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்த விலை உயர்வைத் தவிர்த்து ஸ்கூட்டரில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஜூப்பிட்டர் 110 ஸ்கூட்டரில் 113.3 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 7.91 ஹெச்.பி பவரையும், 9.80 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. மேலும் ISG ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம், டிஸ்க் பிரேக் வசதி, ப்ளூடூத் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, LED விளக்குகள் மற்றும் முன்பக்க எரிபொருள் நிரப்பும் வசதி போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

அதிக மைலேஜ் வழங்கும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக ஜூப்பிட்டர் 110 கருதப்படுகிறது. நகர்ப்புறங்களில் லிட்டருக்கு சுமார் 56 கிலோமீட்டர் மற்றும் நெடுஞ்சாலைகளில் 58 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக டிவிஎஸ் தெரிவித்துள்ளது. விலை உயர்ந்தாலும், வசதிகள் மற்றும் நம்பகத்தன்மை காரணமாக ஜூப்பிட்டர் 110 தனது சந்தை நிலையைத் தொடர்ந்து தக்கவைக்கும் என வாகன வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVS has increased the price of its best selling Jupiter 110 scooter do you know how much the Jupiter costs now


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->