“சமஸ்கிருதம் செத்த மொழி… மோடியின் தமிழ் பாசம் நாடகம்!” – உதயநிதி கடும் விமர்சனம்
Sanskrit is a dead language Modi Tamil love drama Udhayanidhi harshly criticizes
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசுகையில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக குற்றம்சாட்டியுள்ளார். தமிழ் மொழி மீது மோடி காட்டும் பாசம் “போலியான நாடகம்” மட்டுமே எனவும், மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழுக்கான பங்களிப்பு மிகவும் குறைவானது எனவும் அவர் கூறினார்.
உதயநிதி பேசியதாவது:“பிரதமர் மோடி தன்னால் தமிழ் படிக்க முடியாமல் போய்விட்டது என்று ‘பீல்’ செய்கிறார். ஆனால் நம் பிள்ளைகள் தமிழ் படிக்காமல் ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முயல்கிறார். இது எப்படிப்பட்ட அநியாயம்?”
“தமிழுக்கு 10 ஆண்டுகளில் வெறும் ₹150 கோடி மட்டும் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ‘செத்த மொழி’ சமஸ்கிருதத்திற்கு ₹2,400 கோடி! இதுதான் மோடியின் தமிழ் பாச நாடகம்.”
மேலும் மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ₹2,500 கோடி நிதியை மறுத்தது தவறு எனவும் அவர் குற்றம்சாட்டினார்.இந்த பேச்சில் “சமஸ்கிருதம் செத்த மொழி” என்ற குறிப்பே பெரும் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
இதற்கு பதிலளித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:“எந்த மொழியையும் ‘செத்த மொழி’ என்று கூற யாருக்கும் உரிமை இல்லை.”“நாட்டின் பிரார்த்தனைகள், சடங்குகள் அனைத்திலும் சமஸ்கிருதம் இன்று வரை பயன்படுத்தப்படுகிறது. தமிழ் மொழியில் கூட ஏராளமான சமஸ்கிருதச் சொற்கள் கலந்துள்ளன. இது பலவீனம் அல்ல, வலிமை.”
உதயநிதியின் இந்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் தீவிரமான விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், இரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Sanskrit is a dead language Modi Tamil love drama Udhayanidhi harshly criticizes