கொடூர சம்பவம்! மருத்துவமனையில் அதிர்ச்சி – பச்சிளம் குழந்தைகளை கடித்து குதறிய எலிகள்! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. மாநிலத்தின் மிகப்பெரிய ஆஸ்பத்திரிகளில் ஒன்றான இங்கு, எலித்தொல்லை அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

இந்த நிலையிலும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

குழந்தைகள் நல வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த புதிதாகப் பிறந்த இரண்டு பச்சிளம் குழந்தைகள், அங்கு சுற்றித்திரிந்த எலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகின.

சிகிச்சையில் இருந்தபோதே, எலிகள் அந்தக் குழந்தைகளின் கை விரல்களையும் காதுகளையும் கடித்து குதறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்தால் குழந்தைகள் வலியால் அலறி துடித்த நிலையில், உடனடியாக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலத்தின் மிகப்பெரிய மருத்துவமனையில் கூட அடிப்படை சுகாதார பராமரிப்பு இல்லை என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Horrific incident Shock at the hospital Rats bit and stung young children


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->