பள்ளியில் தலைமை ஆசிரியை காலை பிடித்துவிட்ட அரசுப்பள்ளி மாணவிகள்! - தலைமை ஆசிரியை அதிரடி மாற்றம்!
Government school students have grabbed the headmistress leg at school Headmistress changes dramatically
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாவேரிப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 40 மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர்.
அங்கு தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் கலைவாணி. இவரது செயல்பாடு தொடர்பாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. மாணவிகளை அவர் தன்னிடம் கால் அமுக்கி விடுமாறு கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்படி, பள்ளி வளாகத்திலேயே சில மாணவிகள் தலைமை ஆசிரியை கலைவாணிக்கு கால் அமுக்கியதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான சில வினாடிகள் ஓடும் வீடியோ, சமூக வலைதளங்களில் நேற்று பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சம்பவம் குறித்த புகார்கள் மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.
உடனடியாக, மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், தலைமை ஆசிரியை கலைவாணியிடம் நேரடியாக விளக்கம் கேட்டு விசாரித்தனர்.
விசாரணைக்குப் பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, தலைமை ஆசிரியை கலைவாணி அந்தப் பள்ளியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் அரூர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் மீதான இப்படியான நடத்தைக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Government school students have grabbed the headmistress leg at school Headmistress changes dramatically