முதல்வரின் ஊட்டி சுற்றுப்பயணம்: தெப்பக்காடு யானைகள் முகாமிலுள்ள யானைகளுக்கு மு.க.ஸ்டாலின் உணவு வழங்கினார்..!
MK Stalin provided food to elephants at Theppakadu elephant camp
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நீலகிரியில் 05 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஊட்டி தமிழகம் மாளிகையில் தங்கியுள்ள முதலமைச்சர், 02-வது நாளாக இன்று மதியம் 03 மணி அளவில் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் சென்றார். அங்குள்ள தெப்பக்காடு முகாமில் 27 வளர்ப்பு யானைகள் பாகன்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அங்கு யானைகளுக்கு மூலிகையுடன் கூடிய சத்து நிறைந்த உணவு, கரும்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. அங்கு சென்ற முதல்வர் யானைகளுக்கு கரும்பு, மூலிகையுடன் கூடிய சத்து நிறைந்த உணவுகளை வழங்கி முகாமை பார்வையிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து அங்கு வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ரூ.5.6 கோடியில் யானை பாகன்களுக்கான 44 வீடுகள் கொண்ட மாவுத் கிராமத்தை முதல்வர் திறந்து வைத்துள்ளார். மேலும், வனத்துறையினருக்கான 38 வாகனங்களையும் கொடி அசைத்து முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
அதனை தொடர்ந்து அங்கிருந்த பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடியா ஸ்டாலின், முதுமலையில் படமாக்கப்பட்ட ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்பட நாயகர்களான பொம்மன், பெள்ளி தம்பதியை சந்தித்து கலந்துரையாடினார்.

முதல்வர் வருகையையொட்டி தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு காலை முதல் மதியம் வரை சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டு, மதியத்துக்கு மேல் தடை விதிக்கப்பட்டது. அத்துடன் அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது.
English Summary
MK Stalin provided food to elephants at Theppakadu elephant camp