584 நாட்களுக்கு பின் அமெரிக்க பிணை கைதியை விடுவித்த ஹமாஸ் அமைப்பு : கண்ணீர் மல்கிய குடும்பத்தினர்..!
Hamas releases American hostage after 584 days
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 07-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில், இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 251 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் பிடித்து சென்றது.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்து வந்தனர். ஹமாசிடம் இன்னும் 50-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக உள்ளனர்.

இந்நிலையில், ஹமாசிடம் பிணைக்கதியாக உள்ள இஸ்ரேல் வாழ் அமெரிக்கரான இடன் அலெக்சாண்டரை விடுவிக்க அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. இதை ஏற்றுக்கொண்ட ஹமாஸ் அமைப்பு இடன் அலெக்சாண்டரை விடுவித்தனர்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர் கிசுபும் எல்லை வழியாக காசாவில் இருந்து இஸ்ரேலுக்கு அழைத்து செல்லப்பட்டார். 584 நாட்களுக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ள இடன் அலெக்சாண்டரை அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர். ஹமாசிடம் பிணைக்கைதியாக இருந்த கடைசி அமெரிக்க - இஸ்ரேலியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Hamas releases American hostage after 584 days