போலி பாஸ்போர்ட் மோசடி வவழக்கில் சிக்கிய தொழிலதிபர் 900 முறை பாங்காக் பயணம்; அமலாக்கத்துறை விசாரணையில் அதிர்ச்சி..!
Businessman has travelled to Bangkok 900 times shocking revelation in Enforcement Department investigation
போலி பாஸ்போர்ட் மோசடி வழக்கில் சிக்கியவர் தொழிலதிபர் வினோத் குப்தா. இவர், மேற்கு வங்கம் மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கர்தா பகுதியை சேர்ந்தவர். கடந்த 10 ஆண்டுகளில் 900 முறை இவர், பாங்காக் சென்றுள்ளமை அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொழிலதிபர் வினோத் குப்தா மீது கடந்த ஆண்டு இறுதியில் போலி பாஸ்போர்ட் மோசடி தொடர்பாக அமலாக்கதுறை விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் வினோத் குப்தா, வீட்டில் சோதனை நடத்தியதில், போலி பாஸ்போர்ட் மோசடி, ஹவாலா நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பெரிய நெட்வொர்க்குடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
அத்துடன், இவர் வழக்கத்திற்கு மாறாக தாய்லாந்தின் பாங்காக்கிற்கு 10 ஆண்டுகளில் 900 முறை பயணம் மேற்கொண்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோதனையில் ஆவணங்களை கைப்பற்றிய அமலாக்கல் துறை அதிகாரிகள், இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து கிடைத்த வருமானம் ஹவாலா நெட்வொர்க் மூலம் வங்கதேசத்திற்கு அனுப்பப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
English Summary
Businessman has travelled to Bangkok 900 times shocking revelation in Enforcement Department investigation