கேரளாவில் அதிகரிக்கும் மூளையை தின்னும் அமீபா தொற்று: 04 பேர் பலி; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்று காரணமாக, கடந்த 05 நாட்களில் 04 பேர்  உயரிழந்துள்ளமை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் கேரளாவில் 160 பேர் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 37 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், திருவனந்தபுரம் புறநகர்ப் பகுதியான கொடுமானைச் சேர்ந்த விஜயன் 57, என்பவர் சமீபத்தில் உயிரிழந்துள்ளார். அவருக்கு சமீபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிகிச்சையின் போது அவருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து கேரளா சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமீபா மூக்கு வழியாக உடலுக்குள் நுழைகிறது, பொதுவாக மக்கள் மாசுபட்ட குளங்கள், ஏரிகள் அல்லது குளோரின் சேர்க்கப்படாத குளங்களில் நீந்தும்போது அல்லது குளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தேங்கி நிற்கும் நீரில் நீந்துவதைத் தவிர்ப்பது மற்றும் மூக்கைக் கழுவுவதற்கு முறையாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் ன்றும் சுகாதாரதுறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 people die from brain eating amoeba infection spreading in Kerala


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?


செய்திகள்



Seithipunal
--> -->