நாட்டின் அணு ஆயுத திட்டத்தை ஈரானுக்கு விற்க முயற்சி; போலி விஞ்ஞானியின் சதித்திட்டம் அம்பலம்..!
The conspiracy of a fake scientist who tried to sell the countrys nuclear weapons program to Iran is exposed
ஜார்கண்டை சேர்ந்த 60 வயதான அக்தர் உசேன் குத்புதீன் அகமது என்ற போலி விஞ்ஞானியை போலீசார் கைது செய்துள்ளனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அணு ஆயுத திட்டத்தை ஈரான் நிறுவனத்திற்கு விற்க முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானியாக ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த அக்தர் உசேன் குத்புதீன் அகமது (60), என்பவர் நடித்துள்ளார். இவரும், இவருடைய சகோதரர் உசேன் (59), என்பவரும் அடிக்கடி டெஹ்ரான் சென்றுள்ளனர். அங்கு இந்தியா மற்றும் துபாயில் உள் ஈரான் தூதரகங்களுக்கு பலமுறை சென்றுள்ளதாக கூறியுள்ளனர்.

இவர்கள் இருவரும் விஞ்ஞானிகளைப் போல நடித்து, ஈரானைச் சேர்ந்த நிறுவனத்திடம், ஆராய்ச்சி ஒத்துழைப்பு என்ற பெயரில், விபிஎன்னை பயன்படுத்தி லித்தியம்-6 அணுஉலை திட்டம் குறித்த தகவலை விற்க முயன்றுள்ளனர் என்றுகூறினார். அதுமட்டுமில்லாமல், மும்பையில் உள்ள ஈரான் தூதரையும், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி போல் நடித்து ஏமாற்றியுள்ளதாகவும், அக்தர் மும்பை போலீசாராலும், அவரது சகோதரர் உசேன் டில்லி போலீசாராலும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து 10க்கும் மேற்பட்ட வரைபடங்கள், அணு ஆயுத தரவுகள், போலி பாஸ்போர்ட்டுகள், மற்றும் போலி பாபா அணுஆராய்ச்சி மையத்தின் அடையாள அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
The conspiracy of a fake scientist who tried to sell the countrys nuclear weapons program to Iran is exposed