தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; மீண்டும் களமிறங்கும் Spidey Pant..!
Rishabh Pant returns to India squad for South Africa Test series
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக வெஸ்ட் இண்டீக்கு எதிரான 02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்றது. அந்த தொடரை 2-0 என்று இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது. அடுத்தாக, இந்திய அணிக்கு எதிராக தென்னாப்ரிக்கா அணி 02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.
இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் வரும் நவம்பர் 14-ஆம் தேதியும், 02-வது டெஸ்ட் போட்டி நவம்பர் 22-ஆம் தேதி நடக்கவுள்ளன.
இந்நிலையில், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. இதில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியிருந்த ரிஷப் பன்ட் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கில் தலைமையில், அவர் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி முழு அணியின் விபரம் பின்வருமாறு;
கில் (கேப்டன்), ரிஷப் பன்ட் (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், தேவ்தட் படிக்கல், துருவ் ஜூரேல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், பும்ரா, அக்ஷர் படேல், நிதிஷ்குமார் ரெட்டி, முகமது சிராஜ்.
English Summary
Rishabh Pant returns to India squad for South Africa Test series