அமெரிக்காவில் 600 பில்லியன் டாலர்கள் முதலீடு: சவுதி அரேபியா ஒப்பந்தம்..!
Saudi Arabia signs 600 billion investment deal in the US
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இன்று அரசு முறை பயணமாக 04 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். ஜனாதிபதியாக 02-வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய கிழக்கு பயணம் இதுவாகும்.
பயணத்தின் முதல் நாடாக தனி விமானம் மூலம் சவுதி அரேபியா சென்ற ட்ரம்பை ரியாத்தில், சவுதி பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மான் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார்.

பின்னர் டொனால்டு டிரம்பும், முகமதுபின் சல்மானும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதன் போது வர்த்தகம், இருநாட்டு உறவு, இஸ்ரேல்-ஹமாஸ் போர், ஈரான் விவகாரம், கச்சா எண்ணெய் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் 600 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் டொனால்டு டிரம்ப் மற்றும் முகமது பின் சல்மான் இடையே கையெழுத்து ஆகியுள்ளது. அதேபோல், அமெரிக்காவில் இருந்து 142 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ ஆயுதங்களை சவுதி அரேபியா கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த முதலீடு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இருநாட்டுகள் இடையே உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Saudi Arabia signs 600 billion investment deal in the US