பீஹார் சட்டசபை தேர்தல்: முதல் ஆளாக பிரசாந்த் கிஷோர் செய்த காரியம்..!
Prashant Kishor has fielded educated candidates in the Bihar Assembly elections
பீஹார் சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 06 மற்றும் 11-இல் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. அதனையடுத்து ஓட்டுக்கள் 14-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இதனால் பீஹாரின் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இந்த சட்டசபை தேர்தலில் முதல்முறையாக களமிறங்கும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி முதலாவதாக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக 51 தொகுதிகளுக்கு வேட்பாளரை பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

அவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் துணைவேந்தர், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி, நடிகர்கள், சமூக ஆர்வலர்களை வேட்பாளராக ஜன்சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் களமிறக்கியுள்ளார்.
குறிப்பாக, பாட்னா பல்கலை துணைவேந்தர் மற்றும் நாலந்தா திறந்தவெளி முன்னாள் துணைவேந்தர் கேசி சின்ஹா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆர்கே மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் ஒய்வி கிரி, போஜ்புரி நடிகர் ரிதேஷ் பாண்டே மற்றும் டாக்டர்கள் உள்ளிட்ட பலர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
English Summary
Prashant Kishor has fielded educated candidates in the Bihar Assembly elections