மோடி தலைமையிலான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வியக்க வைக்கிறது: பிரிட்டன் பிரதமர் புகழாரம்..!
British Prime Minister praises India's economic growth under Modi leadership as astonishing
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வியக்க வைப்பதாகவும், 2047-இல் பிரதமர் மோடி தலைமையிலான வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறுவதைப் பார்க்க முடிகிறது என பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் பாராட்டியுள்ளார்.
அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்துள்ள பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். அதனைத்தொடர்ந்து, இன்று பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, இரு தரப்பு உறவுகள், வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதோடு, இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதனையடுத்து, நிருபர்களிடம் பேசிய பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் கூறியதாவது: 'பிரதமர் மோடியைச் சந்தித்தது முக்கியமானது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வியக்க வைக்கிறது. 2028-க்குள் இந்தியாவை உலகின் 03-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற முயற்சிக்கும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். 2047-க்குள் முற்றிலும் வளர்ந்த நாடு என்ற உங்களின் கொள்கை நிச்சயம் நிறைவேறும். அதனை நான் இங்கு பார்க்கிறேன். உங்களின் பயணத்தில் நாங்கள் ஒரு கூட்டாளியாக இருக்க விரும்புகிறோம்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
British Prime Minister praises India's economic growth under Modi leadership as astonishing