விஜய் உயிருக்கு ஆபத்து : நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


விஜய் கரூர் சென்றால் அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. விஜய்யின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? என்று யோசிக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


கடந்தமாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்கரூரில் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது  பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது.இந்த சம்பவத்துக்கு பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனத்தை பதிவு செய்தது.

இதையடுத்து இந்த கூட்ட நெரிசல் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் விஜய் இன்னும் மக்களை சந்திக்கவில்லை. விஜய் கரூர் சென்றால் அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அதற்காகவே அவர் பாதுகாப்பு கோரி உள்ளார்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது.  தி.மு.க. அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து நிருபர்கள் த.வெ.க கொடி பா.ஜ.க. கூட்டத்தில் எப்போது பறக்கும் என்று கேட்ட கேள்விக்கு, தற்போது அதற்கு பதிலளிக்க இயலாது என புன்னகையுடன் நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay in life threatening danger Nayanar Nagendrans sensational interview


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->