ஷமி ஓய்வு பெறுகிறாரா..? அவரே கூறிய பதில்..?
Shami own response to the news of his retirement
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளனர். இதற்கு முன்னர் அஸ்வின் அவர்களும் ஓய்வை அறிவித்தார். இவர்களின் திடீர் ஓய்வு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இருந்து வருகிறார். இவர் தற்போது ஐ.பி.எல். தொடரில் விளையாடி வருகிறார். கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின்போது ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் அதிலிருந்து முழுமையாக குணமடைய பல மாதங்கள் ஆகியது.
-c2rb4.png)
குணமடைந்த பின்னர், உள்ளூர் தொடர்களில் விளையாடிய அவர் இழந்தை பார்மை மீட்டெடுத்தார். அதன் பின் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினார். தற்போது ஐ.பி.எல். தொடரில் விளையாடி வரும் அவரால் முன்பு போல் பந்து வீச முடியவில்லை இதனால் ரோகித், கோலி வரிசையில் முகமது ஷமியும் ஓய்வு பெற்றுவிடுவார் என செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் சமியின் ஓய்வு குறித்த செய்திகளுக்கு அவர் பதிலடி கொடுக்கும் விதமாக அந்த செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு கூறியுள்ளதாவது: "ரொம்ப நல்லது மகாராஜ். உங்கள் வேலையில் மீதமுள்ள நாட்களை நீங்கள் எண்ண வேண்டும். சில நேரங்களில் நீங்கள் ஏதாவது நல்லதை சொல்ல வேண்டும். இது இன்றைய நாளின் சிறந்த கதை, மன்னிக்கவும்" என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
Shami own response to the news of his retirement