தனது மெழுகு சிலைக்கு நாய்க்குட்டியுடன் போஸ் கொடுத்த ராம்சரண்...! - லண்டன் அருங்காட்சியகம்
Ram Charan poses with a puppy for his wax statue London Museum
சினிமா பிரபலங்களின் உருவசிலையை வடிவமைத்து லண்டனிலுள்ள ''மேடம் டுசாட்'' அருங்காட்சியத்தில் வைக்கப்படுவது தொடர்ந்து வழக்கமாக நடைபெற்று வருகிறது.அவ்வகையில், இந்தியாவிலிருந்து தென்னிந்திய மற்றும் ஹிந்தி பட நடிகர்களின் உருவச் சிலைகளும் ''மேடம் டுசாட் ''அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதன் திறப்பு விழாவின்போது, லேட்டஸ்டாக, தெலுங்கு திரையுலக நடிகர் ராம்சரணின் மெழுகு சிலையும் அச்சு அசலாக வடிவமைக்கப்பட்டு லண்டனில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ராம்சரண் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.இதில் தனது மெழுகு சிலைக்கு போஸ் கொடுக்கும் ஹீரோக்கள் எல்லாம் தனியாகவே தான் போஸ் கொடுப்பார்கள். ஆனால் நடிகர் ராம்சரண் தான் செல்லமாக வளர்க்கும் ரைம் என்கிற நாய்க்குட்டியை மடியில் அமர்த்தியபடி போஸ் கொடுத்திருந்தார்.
அவரது நாய்க்குட்டியுடன் அவரது மெழுகுச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.இச்சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராம் சரண் சோபாவில் நாய்க்குட்டியுடன் அமர்ந்திருக்கும் தனது மெழுகு சிலையுடன் அதே போன்ற போஸில் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்த நாய்க்குட்டியையும் அமர வைத்தபடி போஸ் கொடுத்தார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
English Summary
Ram Charan poses with a puppy for his wax statue London Museum