ஐந்து நிமிடத்தில் மாலை நேர ஸ்நாக்ஸ் செய்வது எப்படி?
how to make bred cutlet
கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் குழந்தைகள் வீட்டில் இருக்கின்றனர். அவர்களுக்கு ஏதாவது நொறுக்குத் தீனி செய்துகொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இதனால் சுவையான பிரட் கட்லெட் எப்படி செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
எண்ணெய், வெங்காயம், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், குடமிளகாய், உருளை கிழங்கு, பிரட்.
செய்முறை:-
* முதலில் ஒரு வாணலில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், சோம்பு தூள் உள்ளிட்டவற்றைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் குடமிளகாய், வேகவைத்து மசித்த இரண்டு உருளைக்கிழங்கையும் சேர்த்து இறக்கி வைத்துக் கொள்ளவும். இந்த மசாலா கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.
* இதையடுத்து பிரட்டை எடுத்து ஓரங்களை நறுக்கிவிட்டு அவற்றை தண்ணீரில் நனைத்து பிழிந்து எடுத்துக்கவும். ஒவ்வொரு பிரெட் உருண்டைக்குள்ளும் ஒரு மசாலா உருண்டையை நடுவில் வைத்து சிறிய பந்தாக உருட்டி அதனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சுவையான பிரட் கட்லெட் தயார்.