வெம்பக்கோட்டை அகழாய்வு - சுடுமண் நட்சத்திர அணிகலன்கள் கண்டெடுப்பு.!!
clay star ornaments found in vembakottai excavation
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பகோட்டை அருகே விஜயகரிசல் குளம் பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிவுகள் நடைபெற்று வருகிறது. அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், சங்கினால் செய்யப்பட்ட பதக்கம், செப்பு காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 4,750-க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சமீபத்தில் தோண்டிய அகழாய்வு குழியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர வடிவிலான அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பழந்தமிழர்களின் கலை நயத்திற்கு மேலும் ஒரு சான்றாக இந்த சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கிடைத்துள்ளது.
இது குறித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில், "ஆச்சர்யங்கள் நிறைந்த பல தொல் பொருள்களை தன்னுள் வைத்திருக்கும் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வுத் தளத்தில், சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த அணிகலன் அதன் இணையோடு கிடைத்திருப்பது கூடுதல் சிறப்பு. இன்னும் பழந்தமிழர் பொக்கிஷங்கள் பலவற்றை தொல்லியல் துறை வெளிச்சத்துக்கு கொண்டு வரும்” என்றுத் தெரிவித்தார்.
English Summary
clay star ornaments found in vembakottai excavation