மாவட்ட அளவிலான கட்டாய கண்காட்சி..மாவட்ட ஆட்சியர் பிரதாப் தொடங்கி வைத்தார்!
District level mandatory exhibition inaugurated by District Collector Prathap
திருவள்ளூர் மாவட்ட அளவிலான கட்டாய கண்காட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார் :
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் நகராட்சி பூமாலை வணிக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாவட்ட அளவிலான கட்டாய கண்காட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்து பேசினார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருவள்ளூர் மாவட்டம் ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கட்டாய கண்காட்சி இவ்விற்பனை கண்காட்சியில் 54 மகளிர் சுய உதவிக்குழுக்கள் கலந்து கொண்டு தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தினர். மேலும் இக்கண்காட்சி 20.10.2025 வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.
முன்னதாக நகராட்சி பூமாலை வணிக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாவட்ட அளவிலான கட்டாய கண்காட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார்.
இதில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் செல்வராணி, துறை சார்ந்த அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
English Summary
District level mandatory exhibition inaugurated by District Collector Prathap