பிரதீப் ரங்கநாதனின் டியூட் விமர்சனம்..படம் சும்மா அட்டகாசமா இருக்காம்! ஆன ஹிட் அடிப்பது கஷ்டம்!
Pradeep Ranganathan Dude ReviewThe film is just awesome! It's hard to make a hit
இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன், தற்போது தனது புதிய திரைப்படமான டியூட் மூலம் மீண்டும் ரசிகர்களின் முன் வருகிறார். லவ் டுடே மற்றும் டிராகன் ஆகிய படங்கள் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த வெற்றிக்குப் பிறகு, பிரதீப் நடிக்கும் இந்த புதிய படம் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
டியூட் திரைப்படத்தை இயக்கியுள்ளவர் கீர்த்திவாசன். இதில் பிரதீப்புடன் நடிகர் சரத்குமார், நடிகை மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. காதல், ஆக்ஷன், உணர்ச்சி ஆகிய மூன்றையும் கலந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இது அமைந்துள்ளது.
பிரதீப்புடன் ஜோடியாக நடித்த மமிதா பைஜு, இந்தப் படத்தின் மூலம் கோலிவுட்டில் தனது அறிமுகத்தைச் செய்கிறார். ட்ரெய்லரில் அவர் வரும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. பலர் “இனி கோலிவுட்டில் மமிதாவின் காலம் தொடங்கப் போகிறது” என பாராட்டி வருகின்றனர்.
அதேபோல், சாய் அபயங்கரின் இசை இப்படத்தின் பலமாக உள்ளது. “ஊரும் பிளட்” என்ற பாடல் இணையத்தில் வைரலாகி, இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
படம் மொத்தம் 2 மணி நேரம் 19 நிமிடங்கள் ரன்னிங் டைமை கொண்டுள்ளது. இதற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கிய சென்சார் போர்டு அதிகாரிகள், பிரதீப்பின் நடிப்பு, மமிதாவின் காட்சிகள், இசை, ஒளிப்பதிவு ஆகிய அனைத்தையும் பாராட்டியுள்ளனர்.
பைசன், டீசல் போன்ற படங்கள் போட்டியாளர்களாக திரைக்கு வரும் நிலையில், டியூட் திரைப்படம் தீபாவளி பாக்ஸ் ஆஃபிஸில் பந்தயம் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ச்சியான வெற்றிகளுக்குப் பிறகு, பிரதீப் ரங்கநாதனின் டியூட் படம் ரசிகர்களுக்கு இன்னொரு அதிரடி அனுபவமாக அமையும் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
English Summary
Pradeep Ranganathan Dude ReviewThe film is just awesome! It's hard to make a hit