தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சி... திருமாவளவனுக்கு பாதுகாப்பு கொடுங்க! எம்எல்ஏ கோரிக்கை மனு!
VCK Thirumavalavan DGP
விசிக எம்எல்ஏ சிந்தனை செல்வன் இன்று தமிழ்நாடு காவல்துறை தலைவரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், வெறுப்பு அரசியலை மூலதனமாக கொண்டு இயங்கும் சனாதன சக்திகள் தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் தொடர்நது ஈடுபட்டு வருவது தாங்கள் அறிந்ததே.
பொய்யான தகவலை பரப்பி சமூக பதட்டத்தை உருவாக்கிவரும் அத்தகைய மக்கள் விரோத சக்திகளால் எழுச்சித்தமிழர் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் உயிருக்கு தொடர் அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
எனவே தமிழக அரசு அவருக்கு உயரிய பாதுகாப்பை அளிக்க வேண்டுமென தமிழ்நாடு காவல்துறை தலைவர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம்" என்று தெரிவித்துள்ளார்.