கஞ்சா, கொலை முயற்சி வழக்கு... 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!
Ganja attempted murder case 2 people imprisoned under the Goonda Act
திருநெல்வேலியில் கஞ்சா, கொலை முயற்சி வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், வி.எம்.சத்திரத்தை சேர்ந்த மாரிமுத்து தாலுகா காவல் நிலைய சரக பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம், வைராவிகிணறு, நடுத்தெருவை சேர்ந்த அஜீத்குமார்கூடங்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை மிரட்டல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் இதுகுறித்து திருநெல்வேலி தாலுகா போலீஸ் , கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் ஆகிய 2 காவல்துறையும் மேலே குறிப்பிட்ட 2 பேர் மீதும் தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தது . இதையடுத்து அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், 2 பேரும் தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.
English Summary
Ganja attempted murder case 2 people imprisoned under the Goonda Act