தாம்பரத்திலிருந்து கூடுவாஞ்சேரி வரை சிறப்பு ரெயில்கள்!-பண்டிகை கூட்ட நெரிசலுக்கு தீர்வு!
Special trains from Tambaram to KuduvancherI Solution festive rush
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னைவாசிகள் வெளிநகரம் நோக்கி பெருமளவில் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதனால் தாம்பரம் முதல் கிளாம்பாக்கம் வரை வழக்கத்தை விட அதிகமான போக்குவரத்து நெரிசல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை சமாளிக்க தெற்கு ரெயில்வே துறையினர் பயணிகள் நிம்மதிக்காக சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்துள்ளனர்.அக்டோபர் 17-ந்தேதி, தாம்பரத்திலிருந்து இரவு 7.45, 7.53 மற்றும் 8.10 மணிக்கு மூன்று சிறப்பு ரெயில்கள் புறப்படும்.
இவை பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் வழியாக கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும்.அதேபோல், அக்டோபர் 22-ந்தேதி, பண்டிகை முடிந்து திரும்புவோருக்காக காட்டாங்கொளத்தூரிலிருந்து தாம்பரம் நோக்கி ஐந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரெயில்கள் அதிகாலை 4.00, 4.30, 5.00, 5.35 மற்றும் 6.39 மணிக்கு புறப்பட்டு பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் நிலையங்களில் நிற்கும்.
English Summary
Special trains from Tambaram to KuduvancherI Solution festive rush