அடுத்த 24 மணி நேரத்தில் பருவமழை துவக்கம்! சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
Monsoon to begin next 24 hours Chance of rain many districts including Chennai
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது,"தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் முழுமையாக விலகி, வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா, தெற்கு கர்நாடகா மற்றும் ஆந்திராவின் தெற்குப் பகுதிகளில் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் வங்கக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, அக்டோபர் 19-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சாத்தியம் உள்ளது.
தமிழகம் முழுவதும் அடுத்த சில நாட்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. வெப்பநிலை 30–31°C வரை இருக்கும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று முதல் 19-ம் தேதி வரை, தென் தமிழகம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ வரை வேகமான காற்று வீசக்கூடும்; எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
English Summary
Monsoon to begin next 24 hours Chance of rain many districts including Chennai