ஏதாவது அசம்பாவிதம் நடக்க வேண்டும் என்றே த.வெ.க.வுக்கு அந்த இடம் கொடுக்கப்பட்டுள்ளது - எதிர்க்கட்சி தலைவர் பரபரப்பு பேட்டி!
Karur Stampede tvk ADMK Edappadi Palaniswami
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக திமுக அமைச்சர்கள் அவையில் பேசிய உரைகள் பதிவுகளில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரி, வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“விஜய் ஏற்கனவே நான்கு மாவட்டங்களில் பிரசாரம் செய்திருந்தார். ஆனால் கரூரில் த.வெ.க.வினர் கேட்ட இடத்தையே அரசு வழங்க மறுத்தது. கரூரில் த.வெ.க. தலைவர் பிரசாரம் செய்த காட்சிகளை டி.வி.யில் பார்த்தேன் – 500 போலீசர் எங்கும் தெரியவில்லை. ஆனால் ஏடிஜிபி 500 போலீசர் இருந்ததாக கூறுகிறார்; முதலமைச்சர் 600 பேர் இருந்ததாக சொல்கிறார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் எண்ணிக்கையில் பெரிய முரண்பாடு உள்ளது. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
வேலுச்சாமிபுரம் குறுகிய சாலை என்பதால் அங்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அதே இடத்தை த.வெ.க.வுக்கு ஒதுக்கி வழங்கியுள்ளனர். இதனால் திட்டமிட்ட உள்நோக்கம் இருப்பது போல தெரிகிறது.
கரூரில் என் பிரசாரத்திற்காக அ.தி.மு.க. கேட்ட இடம் ஒன்று, வழங்கப்பட்டது வேறு இடம். மேலும் கரூரில் முன்னாள் துணை முதலமைச்சர் மற்றும் முதலமைச்சர் பேசிய இடத்துக்கு எங்களுக்கோ அனுமதி தரப்படவில்லை. ரவுண்டா பகுதியில் கனிமொழி உள்ளிட்டோர் பேசியிருந்தனர்; ஆனால் அதே இடத்தில் விஜய் பிரசாரம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் அரசே அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உருவாக்கி விட்டது போல தெரிகிறது. திமுக முப்பெரும் விழா நடைபெற்ற இடமே த.வெ.க.வுக்கு வழங்கப்பட்டிருக்கலாம்,” என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
English Summary
Karur Stampede tvk ADMK Edappadi Palaniswami