கரூரில் 41 பேர் பலி – விஜய் என்ன சாதிச்சாரு.. அப்பா, மனைவி, மகனையே கிட்ட சேர்த்துக்கல..விஜய்யை கடுமையாக விமர்சித்த நெப்போலியன்! - Seithipunal
Seithipunal


விஜய்யின் அரசியல் சுற்றுப்பயணம் தற்போது பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது. “உங்கள் விஜய் – நா வரேன்” என்கிற பெயரில் மக்களை நேரில் சந்திக்கும் திட்டத்தை தொடங்கிய நடிகர் விஜய், சில வாரங்களுக்கு முன்பு கரூர் மற்றும் நாமக்கல் பகுதிகளுக்கு சென்றிருந்தார். ஆனால் திட்டமிட்ட நேரத்தை விட மிகவும் தாமதமாக வந்ததால், அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த துயர சம்பவத்துக்கு பிறகு விஜய் முதலில் ஒரு ட்வீட்டும் பின்னர் ஒரு வீடியோவும் வெளியிட்டார். ஆனால் அந்த வீடியோவில் தன் பக்கம் ஏற்பட்ட தவறை ஒப்புக்கொள்ளாத போக்கு பலரிடமும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுவரை அவர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்கவில்லை. விரைவில் அனைவரையும் ஒரே மண்டபத்தில் அழைத்து சந்திப்பதாக கூறப்பட்டாலும், இந்த அணுகுமுறை சரியல்ல என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், பிரபல நடிகர் நெப்போலியன் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:“‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொல்லி விட்டு அதற்கேற்றபடி நடக்கவில்லை விஜய். அவர் சாதித்தது என்ன என்று கேட்க விரும்புகிறேன். எதற்காக அவருக்கு தனி விமானமும், ஒய் பிரிவி பாதுகாப்பும் தேவை? அரசியலுக்குள் வந்தவுடன் மக்களோடு மக்களாக கலக்க வேண்டும். பழைய தலைவர்கள் அப்படித்தான் இருந்தார்கள். நானும் அரசியலில் இருந்தபோது அப்படித்தான் நடந்துகொண்டேன்,” என்றார்.

மேலும் அவர் தொடர்ந்தார்:“விஜய் எப்போதுமே யாரிடமும் நெருங்கிப் பழகமாட்டார். சினிமாவிலும் அவருக்கு அந்த மனநிலைதான். சினிமா மாதிரி பஞ்ச் வசனம் பேசுவது அரசியல் இல்லை என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை. குடும்பத்தையே அவர் கிட்டக்கூட சேர்த்துக்கொள்வதில்லை என்று சொல்கிறார்கள். குடும்பத்தையே கவனிக்காதவர் மக்களை எப்படி காப்பாற்றுவார்?” என்று நெப்போலியன் சுட்டிக் காட்டியுள்ளார்.

நெப்போலியனுக்கும் விஜய்க்கும் இடையிலான இந்த மனஸ்தாபம் புதிதல்ல. “போக்கிரி” படத்தின் படப்பிடிப்பு காலத்தில் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு இருவருக்கும் இடையே பனிப்போரினை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த விமர்சனங்கள் விஜயின் அரசியல் பயணத்திற்கு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

41 people died in Karur What has Vijay achieved He did not bring his father wife and son together Napoleon severely criticized Vijay


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->