12 ஆண்டுகளுக்கு பின் பாதாள அறையிலிருந்து அத்திவரதர் வெளிவரவு...! – பக்தர்கள் திரளுக்கு தயாரான கும்பகோணம்
Athi Varadhar emerges from underground after 12 years Kumbakonam ready crowd devotees
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தின் பிரம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் மற்றும் வேதநாராயண பெருமாள் திருக்கோவில்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. 1739-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இத்தலங்கள் சுமார் 180 ஆண்டுகளாக பக்தி மரபை தாங்கி நிற்கின்றன.

இரு பெருமாள்களும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகின்றனர்.இந்தத் திருத்தலத்தின் மிகப் பெரிய சிறப்பு அத்திவரதர் தரிசனம் ஆகும். 1915-ஆம் ஆண்டு முதன்முறையாக பாதாள அறையிலிருந்து வெளிவந்து அருள்பாலித்த அத்திவரதர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2013-ஆம் ஆண்டிலும் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார்.
அவரை தரிசித்தால் சகல தோஷங்களும் நீங்கி, நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்ற ஐதீகம் நிலவுகிறது.இந்நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் வரும் 10-ஆம் தேதி வரை அத்திவரதர் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இதற்காக ஆகம முறைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, நேற்று மாலை பாதாள அறையிலிருந்து எழுந்தருளினார்.பின்னர் வீதியுலா சென்று மீண்டும் கோவிலில் திரும்பிய அத்திவரதருக்கு தைலக்காப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி உற்சாகத்துடன் தரிசனம் செய்தனர்.இந்த விழா நாட்களில் தைலக்காப்பு, புஷ்ப சேவை, ஊஞ்சல் சேவை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
English Summary
Athi Varadhar emerges from underground after 12 years Kumbakonam ready crowd devotees