விராட், ரோஹித் நண்பர்களா? -தைமூரின் கேள்வி கரீனாவை சிரிக்க வைத்தது...!
Are Virat and Rohit friends Taimurs question made Kareena laugh
நடிகை கரீனா கபூர் கான், அண்மையில் தனது மருமகளும் நடிகையுமான சோஹா அலி கானுடன் கலந்து கொண்ட ஒரு பாட்காஸ்டில், மகன் தைமூர் அலி கான் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.அப்போது கரீனா தெரிவித்ததாவது,"என் மகனுக்கு சினிமாவை விட விளையாட்டில் அதிக ஆர்வம்.

நடிப்பு என்றால் அவனுக்கு சலிப்பு! ஆனால் கிரிக்கெட், கால்பந்து வந்தால் கண்கள் மின்னும். ‘அம்மா, நீ விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரின் நண்பரா? அவர்களிடம் இருந்து ஒரு பேட்டை வாங்கி தர முடியுமா?’ என்று அடிக்கடி கேட்பான்.
சில நேரங்களில் ‘மெஸ்ஸியுடன் பேச முடியுமா?’ என்ற கேள்வியும் வரும்,” என்று சிரித்தபடி தெரிவித்தார்.அவர் மேலும் குறிப்பிட்டதாவது,"
“சயிப் அலி கானை பார்த்து அவன் உணவு சமைப்பது, இசைக்கருவிகள் வாசிப்பது, விளையாடுவது போன்றவற்றில் ஈடுபடுகிறான்.
சினிமா வீட்டில் பிறந்த குழந்தை என்றாலும், அவனின் உள்ளம் முழுக்க விளையாட்டு மைதானத்துக்கே சொந்தமானது போல தெரிகிறது" என்றார்.
English Summary
Are Virat and Rohit friends Taimurs question made Kareena laugh