சிக்கிய ஆடியோ ஆதாரம்! ரிதன்யா மரண வழக்கில் அதிரடி திருப்பம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கைகாட்டி புதூரை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா, வரதட்சணை கொடுமையைத் தாங்க முடியாமல் சில வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மூவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ரிதன்யாவுக்கு சொந்தமான இரண்டு மொபைல் போன்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை ஆய்வு செய்ய அனுமதி வழங்க கோரி கவின்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “திருமணத்திற்கு முன்பே ரிதன்யா தனது தோழிகளிடம் தன்னுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று பேசியிருப்பது அந்த மொபைல் போன்களில் உள்ளதாக தெரிகிறது. எனவே அவற்றை ஆய்வு செய்தால் வழக்கின் உண்மை வெளிப்படும்” என கவின்குமார் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு, “போன்களை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தால், சட்டப்படி தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்படும்” என தெரிவித்தது.

இருதரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, இரு மொபைல் போன்களையும் புலனாய்வு அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். மேலும், அவற்றை தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி, அதில் உள்ள தகவல்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாகவும், ரிதன்யாவின் மரணத்தின் பின்னணி குறித்து மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dowry torture suicide ridhanya case


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->