கை குலுக்கிக்கொண்ட இந்தியா-பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள்: பிசிசிஐ-ஐ வறுத்தெடுக்கும் இணையவாசிகள்..!
Netizens are criticizing BCCI for shaking hands between India and Pakistan hockey players
இந்தியா-பாகிஸ்தான் ஹாக்கி அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இரண்டு அணி வீரர்களும் கைகுலுக்கிய சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனெனில், 2025 ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைக்குலுக்க மறுத்தனர்.
ஆட்டம் முடிந்த பிறகு வழக்கமான கைகுலுக்கலுக்காக பாகிஸ்தான் வீரர்கள் காத்திருந்தனர். ஆனால், இந்திய வீரர்கள் யாரும் மைதானத்தில் காணப்படவில்லை. அத்துடன், இந்திய அணியின் டிரஸ்ஸிங் அறையின் கதவை மூடும் காட்சிகள் வெளியாகி கிரிக்கட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் மைக் ஹெசன் கை கொடுக்க இந்திய அணியின் அறை நோக்கிச் சென்ற போதும், இந்திய வீரர்கள் வெளியே வராமல் கை குலுக்க மறுத்தனர் . இதனால் பாகிஸ்தான் அணியினர் அதிருப்தியடைந்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், 'நாங்கள் இங்கு விளையாட மட்டுமே வந்தோம், பாகிஸ்தானுக்கு எதிரான இந்த வெற்றி ஆப்ரேசன் சிந்தூரின் ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.' என்று தெரிவித்து அதற்கு பதிலடி கொடுத்தார்.
அத்துடன், பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க வேண்டாம் என்ற முடிவானது, இந்திய மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு அவர்கள் முடிவெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் பிடிஐ வெளியிட்டிருக்கும் ஒரு செய்தியின் படி, கைக்குலுக்க வேண்டியது கட்டாயம் இல்லை என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதாவது, எதற்காக கைக்குலுக்க வேண்டும் என்று தெரிவித்ததும் பேசுபொருளாக மாறியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய ஆண்கள் அணி கைக்குலுக்க மறுத்ததை போலவே, மகளிர் உலகக்கோப்பை போட்டியிலும் இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் கைக்குலுக்கி கொள்ளவில்லை. அதுவும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டது.
கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் கைக்குலுக்க மறுப்பது விளையாட்டு மரபுக்கு எதிரானது என பல நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில், தற்போது இந்தியா-பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள் கைக்குலுக்கி கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜோகூர் சுல்தான் கோப்பையில் 21 வயதுக்குட்பட்ட இந்திய ஜூனியர் ஹாக்கி வீரர்கள், தங்களுடைய சகவீரர்களான பாகிஸ்தான் வீரர்களுடன் ஒருவரை ஒருவர் ஹைஃபை செய்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 03-3 என இரண்டு அணிகளும் சரிசமமான பலத்தை காட்டின.
இந்தியா-பாகிஸ்தான் U-21 ஹாக்கி அணிகள் ஹை ஃபைவ்களைப் பகிர்ந்து கொண்டது இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, பிசிசிஐயை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Netizens are criticizing BCCI for shaking hands between India and Pakistan hockey players