விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனத்தின் ரூ.1.2 லட்சம் கோடி AI மையம்!
Google AI technology Chandrababu Naidu
மத்திய அரசுடன் நெருங்கிய உறவை பேணும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தற்போது ஆட்சியில் வலுவான நிலையைப் பெற்றுள்ளார். இதை பயன்படுத்தி ஆந்திர மாநில வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தி வருகிறார்.
அவர் ஆட்சி அமைத்த 16 மாதங்களுக்குள் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் மாநிலத்துக்கு வந்துள்ளன. அமராவதி மற்றும் விசாகப்பட்டினத்தை உலக தரமிக்க நகரங்களாக மாற்ற சந்திரபாபு நாயுடு தீவிர முயற்சியில் உள்ளார்.
இந்தப் பின்னணியில், விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனம் ரூ.1.2 லட்சம் கோடி (15 பில்லியன் டாலர்) மதிப்பில் தகவல் மையத்துடன் கூடிய செயற்கை நுண்ணறிவு (AI) மையத்தை அமைக்க உள்ளது. இதுகுறித்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இணைந்து அறிவித்துள்ளனர்.
உலகளவில் கிளவுட் சேவைகள் மற்றும் ஏஐ உள்கட்டமைப்புக்கான தேவை வேகமாக உயரும் நிலையில், கூகுளின் இந்த பிரம்மாண்ட முதலீடு இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமாகக் கருதப்படுகிறது.
இந்த மையம் திறக்கப்பட்டால் உலகத் தரமிக்க ஏஐ நிபுணர்கள் இங்கு பயிற்சி பெறுவார்கள். மென்பொருள் பொறியாளர்கள், மெஷின் லேர்னிங் நிபுணர்கள், கிளவுட் ஆர்கிடெக்ட்கள், சைபர் பாதுகாப்பு மற்றும் தரவு மைய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும். நெட்வொர்க் அமைப்பு, பராமரிப்பு மற்றும் தரவு பாதுகாப்பு துறைகளிலும் வேலை வாய்ப்பு பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Google AI technology Chandrababu Naidu