2026 தேர்தல்: விக்கிரவாண்டியில் ‘வி’ஜய்? திருப்பம் தரும் ‘வி’ (V) செண்டிமெண்ட்! வெளியான பரபரப்பு தகவல்!
TVK Poll Debut Will Vijay Choose Vikravandi
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க), தனது முதல் தேர்தல் களத்தை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் விஜய் எங்கு போட்டியிடுவார் என்பதே தற்போதைய ஹாட் டாபிக்!
திருப்பம் தரும் ‘வி’ (V) செண்டிமெண்ட்!
கட்சித் தொடங்கிய போதே வெற்றியைக்குறிக்கும் 'V' என்ற எழுத்தில் தொடங்கும் ஊர்களை விஜய் முக்கியத்துவமாக கருதினார். அந்த வகையில் வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகள் பரிசீலனையில் இருந்தாலும், முதலிடத்தில் இருப்பது விக்கிரவாண்டி தான்.
ஏன் விக்கிரவாண்டி?
வரலாற்றுச் சிறப்பு: கட்சியின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியின் வி.சாலையில் தான் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அடையாளச் சின்னம்: மாநாடு நடந்த இடத்தில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் 100 அடி உயரக் கொடிக்கம்பமும், கல்வெட்டும் இன்றும் தொண்டர்களையும் பயணிகளையும் ஈர்க்கும் ஒரு சுற்றுலாத் தலமாகவே மாறிவிட்டது.
வியூகம்: விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தத் தொகுதி, சென்னையை மாநிலத்தின் பிற பகுதிகளுடன் இணைக்கும் மையப்புள்ளியாக உள்ளது. இங்கு போட்டியிடுவதன் மூலம், மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரத்திற்குச் சென்று வருவது எளிதாக இருக்கும் என விஜய் கருதுகிறார்.
தொகுதிப் பின்னணி:
2011-ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி, 103 ஊராட்சிகளைக் கொண்ட ஒரு கிராமப்புறம் சார்ந்த பகுதியாகும். காணை, கோலியனூர், கண்டமங்கலம் போன்ற முக்கிய ஊராட்சிகள் இதில் அடங்கும்.
தனது கட்சியின் முதல் முத்திரையைப் பதித்த விக்கிரவாண்டியிலேயே களமிறங்கி, வெற்றியைத் தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
English Summary
TVK Poll Debut Will Vijay Choose Vikravandi