அடி வாங்கிய ஊடகவியலாளர்கள் மீது வழக்கு பதிவு... சர்வதிகார ஆட்சிக்கு இந்த திமுக ஆட்சியே சாட்சி - தவெக கடும் கண்டனம்!
TVK condemn to DMK Mk STalin govt
தவெக நிர்வாகி லயோலா மணி விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "அடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் அடி வாங்கிய ஊடகவியலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்வது ஜனநாயக படுகொலை.
ஊடகவியலாளரை சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்கள் தாக்கும் வீடியோ ஆதாரமாக இருந்தும் அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருப்பது சர்வதிகார ஆட்சிக்கு இந்த திமுக ஆட்சியே சாட்சி என்பதை வெளிப்படுத்துகிறது.
அரசும்,காவல்துறையும் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும்.
இப்படி குண்டர்கள் பக்கம் நிற்பது வருத்தமாக இருக்கிறது.
அதிகாரத்தை தவற பயன்படுத்துவதுதான் திராவிட மாடல் ஆட்சியா?
அடி வாங்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து மீண்டும் மீண்டும் அவர்களை பலவீனப்படுத்துவது பாசிச போக்கு என்பதை முதல்வர் எப்பொழுது உணர்வார்?
சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மீது ஐயா ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருக்க காரணம் என்ன?
இதுதான் மக்களை காக்கும் லட்சணமா? என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள் ஸ்டாலின் சார்.
சமூக நீதி மாடல், சமத்துவ மாடல் என்று தயவு செய்து ஐயா ஸ்டாலின் அவர்கள் பேசுவதை நிறுத்துக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
TVK condemn to DMK Mk STalin govt