காசாவில் பொதுவெளியில் 08 பேரை சுட்டுக்கொன்ற ஹமாஸ் பயங்கரவாதிகள்; காரணம் என்ன..?
Hamas terrorists shot dead 8 people in public in Gaza
இஸ்ரேல் - காசா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், ஹமாஸ் பயங்கரவாதிகள், பாலஸ்தீனியர்கள் எட்டு பேரை பொதுவெளியில் நிறுத்தி சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் போரை நிறுத்த அமெரிக்கா முன்மொழிந்த அமைதி திட்டத்தின் அடிப்படையில் தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஹமாஸ் படையினர் தன்வசம் இருந்த பிணைக் கைதிகளை விடுவித்தது வருகிறது.

அத்துடன், இஸ்ரேலும் தங்கள் நாட்டு சிறையில் இருந்த பாலஸ்தீனியர்களை விடுவிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக காசாவில் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், நேற்றையதினம் ஹமாஸ் அமைப்பினருக்கும், காசாவின் செல்வாக்கு மிக்க ஆயுதமேந்திய குழுவான டக்முஷ் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதன் போது இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 32 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
காசாவில் இருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறத் தொடங்கிய பின்னர், ஹமாஸ் பயங்கரவாதிகள், காசாவை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிக்கின்றனர். கருப்பு முகமூடி அணிந்த ஹமாஸ் காவலர்கள் வடக்கு காசாவில் தெருக்களில் ரோந்து செல்லத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், எட்டு ஆண்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் சாலை ஒன்றில் வைத்து சுட்டுக் கொல்லும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு மண்டியிட்ட நிலையில் சுட்டுக் கொல்வது பதிவாகியுள்ளது.
அவர்கள் தங்களுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி அவர்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் கொன்றுள்ளனர். இஸ்ரேல் ஆதரவு பெற்ற சில ஹமாஸ் எதிர்ப்பு குழுக்கள், மனிதாபிமான உதவிகளை திருடி, லாபத்திற்காக விற்பனை செய்ததாகவும் ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது காசாவின் பட்டினி நெருக்கடிக்கு காரணமாக அமைந்ததாகவும், அதன் காரணமாகவே அவர்களை கொன்றதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Hamas terrorists shot dead 8 people in public in Gaza