போதைப்பொருள் தடுப்பு பிரிவில் கூடுதல் பொறுப்பு பெரும் தமிழக ஐபிஎஸ் அதிகாரி ஆர்.சுதாகர்..!
Tamil Nadu IPS officer R Sudhakar has been given additional responsibility in the Narcotics Control Division
போதைப்பொருள் தடுப்பு பிரிவு சென்னை மண்டல துணை இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரியான ஆர். சுதாகருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது சென்னை மண்டல போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் துணை இயக்குநராக பதவியில் இருக்கும் டி.ஜி. வெங்கடேஷ், புதுதில்லியில் உள்ள NCB தலைமையகத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து,2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான சுதாகருக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது வடகிழக்கு பிராந்தியத்தின் துணை இயக்குநராக பதவி வகித்து வரும் இவர், இந்த ஆண்டு மார்ச் மாதம் கவுகாத்தியில் பொறுப்பேற்றார். இவர் ராணிப்பேட்டையில் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது பணியைத் தொடங்கி, பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். தர்மபுரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். அத்துடன், சென்னை அடையாறு மற்றும் புளியந்தோப்பில் துணை காவல் ஆணையராகவும் பணியாற்றியவர்.
2007-ஆம் ஆண்டில்,டிஐஜி ஆக பதவி உயர்வு பெற்ற சுதாகர், பின்னர் சென்னை பெருநகர காவல்துறையின் இணை ஆணையர் (வடக்கு), போக்குவரத்து இணை ஆணையர் மற்றும் இணை ஆணையர் (கிழக்கு) போன்ற பதவிகளை வகித்துள்ளார்.

மேலும், மதுரை ரேஞ்சின் டிஐஜியாகவும் பணியாற்றியதோடு, பின்னர் மேற்கு மண்டலத்தின் ஐஜி ஆக பதவி உயர்வு பெற்றார். இதனை அடுத்து, சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டவர்.
இந்நிலையில், தற்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவு சென்னை மண்டல துணை துணை இயக்குநர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சுதாகர் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் அதிகார வரம்பைக் கொண்டிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tamil Nadu IPS officer R Sudhakar has been given additional responsibility in the Narcotics Control Division