கரூர் பலி தொடர்பாக அனைத்துத் தரப்பினரும் பொறுப்புணர்வுடன் செயல்படுவோம் - முதலமைச்சர் முக ஸ்டாலின்!
Karur Stampede TVK Vijay DMK Mk Stalin CM
கரூர் பலி தொடர்பாக அனைத்துத் தரப்பினரும் பொறுப்புணர்வுடன் செயல்படுவோம் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரின் செய்திக்குறிப்பில், "கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை.
எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது. இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (SOP) அரசு வகுத்து வருகிறது.
உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம்! ” என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Karur Stampede TVK Vijay DMK Mk Stalin CM