உயிரிழந்தோருக்கு மவுன அஞ்சலி! -வெற்றிக் கழகத்தினருக்கு விஜயின் உணர்ச்சிப் பூர்வ உத்தரவு!
Silent tribute deceased Vijays emotional message Victory Party members
கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேரின் மரணம் தமிழகமெங்கும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், மாநிலம் முழுவதும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டதாவது,"இந்த பேரிழப்பில் உயிர் இழந்தோரின் நினைவாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் வெற்றிக் கழகத்தினர் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டும். அவர்களின் படங்களுக்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி, மவுன அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்துங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.இந்த அறிவிப்பால், ரசிகர்கள் மத்தியில் “விஜயின் மனதளவிலான அனுதாபம்” என்ற பாராட்டு எழுந்துள்ளது.
English Summary
Silent tribute deceased Vijays emotional message Victory Party members