பண்டிகை கூட்ட நெரிசல் தீர்க்க ரெயில்வே அதிரடி நடவடிக்கை! கூடுதல் ரெயில்கள் அறிவிப்பு!
Railways takes drastic action to ease festive rush Additional trains announced
தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்க தீர்மானித்துள்ளது.தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரெயில்
பண்டிகை கூட்ட நெரிசலை சமாளிக்க நாளை அக்டோபர் 16-ந்தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரெயில், மறுநாள் பகல் 1.25 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.

திரும்பும் பயணத்திற்காக, இந்த ரெயில் அக்டோபர் 17-ந்தேதி பிற்பகல் 3.35 மணிக்கு கன்னியாகுமரியில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு செங்கல்பட்டுவில் வந்தடையும்.
சென்னை சென்ட்ரல் – கோவை போத்தனூர் சிறப்பு ரெயில்
பண்டிகை விடுமுறையினை முன்னிட்டு, சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 17 மற்றும் 18 தேதிகளில் இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரெயில், மறுநாள் காலை 9.30 மணிக்கு போத்தனூரை அடையும்.
திரும்பும் ரெயில் அக்டோபர் 18-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு போத்தனூரில் புறப்பட்டு, இரவு 11.10 மணிக்கு சென்ட்ரலில் வந்தடையும்.
முன்பதிவு இன்று தொடங்கியது!
தீபாவளி பயண திட்டங்களை உறுதி செய்ய விரும்பும் பொதுமக்கள் உடனே முன்பதிவை மேற்கொள்ளலாம்.
English Summary
Railways takes drastic action to ease festive rush Additional trains announced